எனது தளத்திற்கு வந்திருக்கும் புதிய வருகையாளருக்கும் பழைய வருகையாளருக்கும் வணக்கம். முதலீடு ஏதும் போடாமல் பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடி எனக்காகவும் உங்களுக்காகவும் எழுதி வருகின்றேன்.



Sunday 22 June 2014

இணையம் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி

இது 1 பைசாவிற்காக தினமும் ஒரு மணி நேரம் விளம்பரங்களைப் பார்வையிடும் PTC தளம் பற்றிய பதிவோ அல்லது 5 டாலர் பெறுவதற்காக மாதம் முழுதும் மின்னஞ்சல்களைப் படிக்கும் தளம் பற்றிய பதிவோ அல்ல . இதில் நான் பகிர்ந்து இருக்கும் தளம் என் சொந்த 
அனுபவத்தில் எழுதுவது .கடந்த  5   மாதங்களாக குறிப்பிட்ட ஒரு நல்ல வருவாயை பெற்ற பிறகே இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இது குறித்த சந்தேங்களை கருத்துக்கள் மூலமாக கேளுங்கள் .
பெரும்பாலும் இணையத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோப்புகளை பகிர்வதற்கு உபயோகிக்கும் தளங்கள் Mediafire .com , Rapidshare .com , Hotfile .com ,filesonic .com , megaupload .com போன்றவை ஆகும் ( இதில் megaupload மற்றும்filesonic ஆகியவை இப்போது உபயோகத்தில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள் .)இது போன்ற தளங்களில் உங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதால் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் லாபம் ஈட்டுவது மிக மிகக் கடினம் . ( 1000 டவுன்லோடுக்கு 10 முதல் 15 டாலர் வரை மட்டுமே கிடைக்கும் ) ஆனால் இதே வசதியை content locking system என்று சொல்லப்படும் தளங்கள் 600 முதல் 800 டாலர் வரை அளிக்கின்றன (1000 டவுன்லோடிற்கு) .உதாரணமாக பாடல்கள் மற்றும் மென்பொருட்கள் , தகவல்கள் அடங்கிய கோப்பை பகிர்வோர் இந்த இணையத்தை உபயோக்கிகலாம் .
இப்படி நமக்கு பணம் தருவதால் இவர்களுக்கு என்ன நன்மை? 
இணையத்தைப் பொறுத்தவரை தமக்கு நன்மை இன்றி ஒருவரும் நமக்கு பணம் தரப் போவதில்லை . இவர்கள் தளத்தில் ஒருவர் ஏதேனும் கோப்பை டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கு சர்வே போன்று ஏதேனும் செய்ய வேண்டும் ( நீங்கள் அல்ல கோப்பை யார் டவுன்லோட் செய்கிறார்களோ அவர்கள் ). அந்த சர்வேயை அவர்கள் முடித்த பின் தான் குறிப்பிட்ட கோப்பை டவுன்லோட் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் டவுன்லோட் செய்த பின் உங்கள் கணக்கில் ௦.60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து இருக்கும் . இவை அனைத்தையும் வழங்கும் இந்தத் தளத்தின் பெயர் SHARECASH     சரி இதனை இப்போது எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம் .
முதலில் இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்  






நீங்கள் பகிர விரும்பும் கோப்பை பதிவேற்றவும் ( upload )

கோப்பை பதிவேற்றிய பின் upload manager மூலம் உங்கள் கோப்பின் தரவிறக்கச் சுட்டியைப் பெறவும் (டவுன்லோட் லிங்க்)

அவ்வளவு தான் இப்போது இந்த தரவிறக்கச் சுட்டியை உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள் ( உதாரணமாக தூய தமிழில் குழைந்தைகள் பெயர் என்ற கோப்பை நீங்கள் ஷேர்காஷ் மூலமாக பதிவேற்றி 

உங்கள் வலைத்தளத்தில் இணைத்துள்ளீர்கள் ) உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாசகர்கள் தரவிறக்கச் சுட்டியை சொடுக்கி கோப்பை தரவிறக்கம் செய்யும் போது கீழே உள்ளது போன்று தோன்றும் 




ஆம் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு சர்வேயை முடித்தால் மட்டுமே ( 2 நிமிடத்திற்கு மேல் ஆகாது ) இந்தக் கோப்பை தரவிறக்கம் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் தரவிறக்கம் செய்யும் போது உங்கள் கணக்கில் .60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து விடும் , ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பணத்தை பேபால் , அல்லது மணிபுக்கர் மூலம் பெற்றுக் கொள்ளல்லாம் 
இது மிக மிக நம்பகத்தன்மையான தளம் , நீங்கள் சரியாக உபயோகித்தால் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .
தளத்தில் இணைய இங்கே செல்லவும்